கலவை வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்ட அதிகாரிகள் ஆய்வு

கலவை பேரூராட்சியில் இயங்கி வரும் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்ட அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்

Update: 2021-07-26 13:42 GMT

கலவையில் உள்ள  வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் வாழப்பந்தல் சாலையில் உள்ள பேரூராட்சிக்குட்பட்ட இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வளம் மீட்பு பூங்காவை ஒன்றை நிர்வாகம்  அமைத்து செயல்படுத்தி வருகிறது. அதில், பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பூங்காவில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என  பிரித்து எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ,திடக்கழிவு வளாகத்தில் நடந்து வரும் பணிகளை மாநில திடக்கழிவு மேலாண்மை வல்லுநர் டாக்டர் ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, பேரூராட்சி பணியாளர்கள்   மூலம் தயாரிக்கப்படும். இயற்கை உரம், மண்புழு உரம், தழை உரம் ,  ஆகியன தயாரிக்கும் முறைகள்  குறித்து  ஆய்வு செய்தனர்.

பின்னர், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களை உடைத்து தூளாக்கும் உடைப்பு இயந்திரம் மற்றும் அரைத்து பிளாஸ்டிக் துகள்கள்  தார் சாலைக்கு பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஆய்வின் போது, பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு )சரவணன், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News