குற்றங்களை தடுக்க "சேர்வோம் எழுவோம்": புதிய ரோந்து முறை அறிமுகம்.
ஆற்காட்டில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் "எழுவோம் சேர்வோம்" என்ற புதிய ரோந்து முறையை எஸ்பி தீபாசத்தியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்;
ராணிப்பேட்டை மாவட்டத்தில்பொது மக்கள்,போலீஸாரிடையே உள்ள நல்லுறவு ஏற்பட்டு குற்றங்களை தடுக்கும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளில் இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகிறது . அதன் அடிப்படையில்,சமூக காவலில் ஈடுபட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் விதமாக பிரத்யேகமான ரோந்து முறைகளை போலீஸார் பின்பற்றி வருகின்றனர்.
அதில், கிராமிய விழிப்புணர்வு குழுக்கள், ரோந்து கண்காணிப்பு, மின் அமைப்பு, சட்டையில் கேமிரா பொருத்திய ரோந்து போன்றவை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் ரோந்து அமைப்பானது கருடா சிறப்பு ரோந்துமுறை துவங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
அதனைத்தொடர்ந்து "சேர்வோம், எழுவோம்" என்ற புதிய ரோந்துமுறை ஆற்காட்டிலுள்ள திருமண மண்டபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார், டிஎஸ்பி பிரபு முன்னிலை வகித்தார்.
மாவட்ட எஸ்பி தீபா சத்யன் கலந்து கொண்டு ரோந்துசெல்லும் காவலர்களுக்கு புதிய ரோந்து முறை குறித்து விளக்கினார் . பின்பு ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஆற்காடு, இராணிப்பேட்டை, மற்றும் திமிரி காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்,மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.