கள் இறக்கி விற்க அனுமதி கோரி தலைகீழாக நின்று நூதன ஆர்ப்பாட்டம்

ஆற்காடு அருகே, கள் இறக்கி விற்க அரசு அனுமதிக்க கோரி தலைகீழாக நின்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-01-23 00:15 GMT

கள் இறக்க அனுமதி கேட்டு, தலைகீழாக சிரசாசனம் செய்து போராட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் கள் இறக்கும் தொழிலாளர்கள்,  பனங்கள்ளை இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் எனவும், கள்ளை  உணவுப்பொருளாக அனுமதிக்க  வேண்டும் எனவும், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக,  கள் இயக்க சங்கத்தின் மாநிலத்தலைவர் நல்லசாமி தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கன்னிகாபுரம் கூட்ரோடில் பொன்னமங்கலம், சொரையூர், சேராப்பட்டு, கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கள் இறக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், கள் இறக்க அரசு அனுமதி வழங்கக் கோரியும்,  கள்ளை உணவுப்பொருளாக அறிவிக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கள் இறக்கும் தொழிலாளி ஒருவர்,  தலைகீழாக நின்று கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் சிறுவர்களுக்கு கள்ளை ஊற்றித்தந்து குடிக்கச் செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News