குவாரியில் ஜெலட்டின் குச்சி வைத்த மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ஆற்காடு அருகே உள்ள மலையில் அரசு மூடிய கல்குவாரியில் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை புதைத்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த நாராயணபுரத்தை யொட்டியுள்ள மலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனம் கல் குவாரியை இயக்கி வந்தது. குவாரியின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் கள்ளத்தனமாக தொடர்ந்து நிறுவனம் இயக்கியது . இதுகுறித்த பொதுமக்களின் புகாரின் பேரில் கடந்த 15 ஆண்டுகளாக முடப்பட்டுள்ளது..
ஆனாலும் , கடந்த 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மர்ம நபர்கள் மூடிய குவாரியிலிருந்து வெடிவைத்து பாறைகளைத் தகர்த்து விற்று வந்தனர். இது சம்பந்தமாக அப்பகுதிமக்கள் அதிகாரிகளுக்கு அளித்தபுகாரின் பேரில் மீண்டும் அதிகாரிகள் குவாரியைப் பார்வையிட்டு நிரந்தரமாக மூடினர். அப்போது மர்மநபர்கள் பாறைகளை தகர்க்க வைத்த ஜெலட்டின் குச்சிகள் அகற்றப்படவில்லை.
இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் புவியியல் மற்றும் கனிம வளத்துறை அலுவலர்(பொறுப்பு) பெர்னாட் பாறைகளில் துளையிட்டு வைக்கப்பட்டிருந்த 175 ஜெலட்டின் குச்சிகளை வெடிக்கச் செய்தனர்.
இதனையடுத்து ,அரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கவுதமி சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை பதித்து பாறைகளைத்திருடி விற்றது குறித்து ரத்தினகிரி போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீஸார், நாராயணபுரத்தைச் சேர்ந்த கன்னியப்பன்,சுதாகர்,,சீனிவாசன், சுதாகர்,அரிராஜன், உமாபதி,சங்கர்,உதயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிந்துள்ளனர். மேலும். ஜெலட்டின் குச்சி பதித்த மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்..