கலவையருகே இடம் பிரச்சினைக் காரணமாக நெசவாளிக்கு வெட்டு

வாழைப்பந்தல்அருகே இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட சண்டையில் நெசவுத் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்;

Update: 2021-06-16 06:05 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த வழைப்பந்தல் அருகே உள்ள   பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை.நெசவு தொழிலாளி. அவரது பக்கத்து வீட்டுக்காரர் ரவி. இவர் பனைமரம் ஏறும்  கூலி தொழில் செய்து வருகிறார்  இந்நிலையில் ஏழுமலை,ரவி இருவருக்கும் வீட்டின் இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து  நேற்றும் தகராறு ஏற்பட்டது.  அதில் ஆத்திரமடைந்த ரவி, ,தான் வைத்திருந்த கத்தியால்  ஏழுமலையை சரமாரியாக வெட்டியுள்ளார் .அதில் படுகாயம் அடைந்த ஏழுமலையை. அவரதுஉறவினர்கள் மீட்டு செய்யார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் வேலூர்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரை அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ஏழுமலையின் புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ரவியைக் கைது செய்தனர்.

Tags:    

Similar News