கொரோனா விதி மீறல்; கலவையில் அபராதம்
கலவை பேரூராட்சியில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் வருவாய்துறையினர் அபராதம் வசூலித்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வட்டாட்சியர் நடராஜன் தலைமையில் வருவாய்துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கொரோனா விதிகளை மீறிய கடைகள் மற்றும் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஊரடங்கு தளர்வுகளின்படி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறக்க வேண்டும். கடையில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் கலவை தாசில்தார் நடராஜன் தெரிவிவித்தார் .
பின்னர், வருவாய் துறையினர் கலவை பஜார் பகுதி மற்றும் ஆற்காடு சாலையில் கொரோனா தடுப்பு விதிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ,கொரோனா விதிமீறிய கடைகளுக்கு. மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் வசூலித்தனர். விதிகளை மீறி வந்தவர்களிடம் தொடர்ந்து விதிகளை கடைப்பிடிக்காமல் இருந்தால் மேலும் கூடுதல்அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.