ஆற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி.

ஆற்காடு நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.;

Update: 2021-12-22 04:25 GMT

ஆற்காட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும்  ஒருமுறை மட்டும் உபயோகப்படுத்தி வீசியெறியும் பிளாடிக் கப்புகள், தட்டுகள், பைகள், டம்ளர் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்த மற்றும் விற்பனை தமிழக அரசு தடைவிதித்துள்ளது . எனவே அரசு உத்தரவை மீறி விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துவோர் ஆகியோரை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில். ஆற்காடு நகராட்சியில் நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் தலைமையில்  ஆய்வாளர்கள் சத்தியமூர்த்தி, செல்வராஜ் மற்றும் மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர்  நகராட்சி பகுதிகளில்  உள்ள  கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1 டன்னுக்கும் மேலாக பறிமுதல் செய்து பதுக்கி வைத்திருந்த 3 கடைகளுக்கு மொத்தமாக ரூ.50ஆயிரத்தை  அபராதமாக விதித்தனர்.

மேலும் இதுபோன்று அரசு தடை செய்யப்பட்டப் பொருட்களை வைத்து விற்பனைசெய்பவர்கள் மற்றும். பயன் படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை செய்தனர்.

Tags:    

Similar News