புதியவழித்தடங்களில் பேருந்துகள்: அமைச்சர் காந்தி tதொடங்கி வைத்தார்

ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து புதியவழித்தடங்களில் பேருந்து சேவைகளை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.;

Update: 2021-12-03 16:10 GMT

புதிய பேருந்து வழித்தடங்களை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் காந்தி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்க ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் கோரிக்கை வைத்தார். அதன்பேரில், தமிழக முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து புதியவழித் தடங்களில் பேருந்துகள் இயக்கும்  துவக்கவிழா நடந்தது.

விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார், அரக்கோணம் எம்பிஜெகத்ரட்சகன், இராணிப்பேட்டை ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தனர், இராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்தியன் வரவேற்றார் .

விழாவில் ,சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சர் காந்தி கொடியசைத்து பேருந்துகள் இயக்கத்தை துவக்கி வைத்தார் 

அதனைத் தொடர்ந்து தடம்எண் 444K, வாழைப்பந்தலிலிருந்து கலவை, ஆற்காடு ,வேலூர் மற்றும் ஓசூர் வழியாக பெங்களூரூக்கும், தடம்எண் 123G திமிரியிலிருந்து ஆற்காடு வழியாக சென்னைக்கும்  என 2 புறநகர்வழித் தடங்கள் மற்றும்  ஆற்காட்டிலிருந்து புதிய நகர வழித் தடங்களான

T34/A,மாம்பாக்கம், சொறையூர் காலனி வழியாக பொன்னமங்கலம்,

T43/B,வெங்கடாபுரம், நாயக்கநேரி, ஆற்காட்டான் குடிசை ,மூஞ்சூர்பட்டு வழியாக அடுக்கம்பாறை,

T41/A, குண்டலேரி வழியாக கலவை,

T55A, அனைத்து சேவைகளும் விளாப்பாக்கம் வழியாக இயக்குதல்,

T7J, வேலூர்- மோத்தக்கல் கூடுதலாக சேவைகள்  இயக்குதல்,

T,3/A வேலூர்-வெங்கடாபுரம் கூடுதல்  இயக்கம்.

T42/A,விளாப்பத்திற்கு கூடுதல் நடைகள் இயக்கம் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயங்கத்தொடங்கியது.

இத்துவக்கவிழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவர் ஜெயந்தி, போக்குவரத்துக்கழகப் பொதுமேலாளர்மற்றும் அலவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News