சட்டவிரோதமாக குவாரியில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து அழிப்பு
ஆற்காடு அருகே மூடியுள்ள கல்குவாரியில் சட்டவிரோதமாக கற்களைத் தகர்க்க வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து அழிக்கப்பட்டது
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு அருகே நாராயணபுரம் பகுதியில் உள்ள மலையில் கடந்த 20ஆண்டாக கல்குவாரியை குத்தகை எடுத்து தனியார் நிறுவனம் இயங்கியது. குத்தகைக்காலம் முடிவடைந்தும் குவாரி கள்ளத்தனமாக நடந்த நிலையில் அதிகாரிகள் நடவடிக்கையால் மூடப்பட்டது.
இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியைச்சேர்ந்த சிலர் கள்ளத்தனமாக தொடர்ந்து பாறைகளை வெடிவைத்து தகர்த்து கற்களை திருடி விற்றுவந்தனர் . இதுகுறித்து, கிராம மக்கள் கடந்த ஆண்டு இராணிப்பேட்டை சப்கலெக்டர் இளம் பகவத்திடம் முறையிட்டனர். அதன்பேரில், சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குவாரி நிரந்தரமாக மூடிவைக்கப்பட்டது..
ஆனால், அப்போது பாறைகளை வெடிவைத்து தகர்க்க மலையில் துளையிட்டு வைத்த ஜெலட்டின் குச்சிகளை அகற்றாமல் அப்படியே விடப்பட்டதால், அவை எந்நேரமும் வெடிக்கும் அபாயத்தில் இருந்து வந்தது.
இதனால்., நாராயணபுரம் கிராமமக்கள் ஆடுமாடுகளை மேய்க்க அப்பகுதிவழியாக அச்சத்துடன் செல்ல வேண்டியிருந்ததால், பாதுகாப்பின்றி எந்நேரமும் வெடிக்கும. நிலையில் உள்ள ஜெலட்டின் குச்சிகளை அகற்றிட வேண்டி கோரிக்கைவிடுத்தனர்.
இதனையடுத்து, கனிமவளத்துறையினர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் குவாரிப்பகுதியினை ஆய்வு அவற்றை வெடிக்கச்செய்தனர். இதனால் பெரும் அச்சத்திலிருந்த மக்கள் நிம்மதியடைந்தனர் .
மேலும் அரசு மூடிய குவாரியில் சட்டவிரோதமாக துளையிட்டு வைத்த ஜெலட்டின் குச்சிகளை வைத்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்ககோரி கனிமவள அதிகாரிகள் இரத்தினகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.