ஆற்காடு: பீடி சிகரெட் விற்ற கடைகளுக்கு சுகாதாரத்துறை அபராதம்

தடைசெய்யப்பட்ட இடங்களில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகாரர்களிடம் சுகாதாரத்துறையினர் அபராதம் வசூலித்தனர்.

Update: 2021-08-24 02:22 GMT

பீடி,சிகரெட் விற்றகடைகளுக்கு சுகாதாரத்துறை அபராதம்.

ஆற்காடு, சுற்று வட்டாரங்களில் தடைசெய்யப்பட்ட இடங்களில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகாரர்களிடம் சுகாதாரத்துறையினர் அபராதம் வசூலித்தனர். இராணிப்பேட்டை மாவட்ட ஆற்காடு வட்டார சுகாதாரலுவலர் சுரேஷ்பாபுராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ,ஆற்காடு வட்டாரப்பகுதிகளான மாங்காடு, லப்பப்பேட்டை, தாஜ்புராமற்றும், கஸ்பா உள்ளிட்ட பலபகுதிகளில் உள்ள பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களைக்கண்டறித்து அபராதம் வசூலிக்கும் பணியல் ஈடுபட்டனர்.

அப்போது தடைசெய்யப்பட்ட இடங்களில் பீடி, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனைசெய்தமற்றும் புகைப்பிடிக்க அனுமதித்த 12 கடைகளுக்குதலா ₹100 அபராதம் விதித்தனர். மேலும், பொதுஇடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு, முகக்கவசம் அணியாமல் இருந்தவரகளுக்கு தலா ₹200 என சுகாதாரத்துறையினர் அபராதம் வசூலித்தனர்.

பின்னர் கடைகாரர்களிடம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் கடைகளில் புகைப்பிடிக்கக்கூடாது என்ற அறிவிப்பை வைக்க வேண்டும் என்று அறிவுத்தினர்.

Tags:    

Similar News