ஆற்காடு ஒன்றியம் 5வது வார்டில் மும்முனைப்போட்டி
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் போட்டி;
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கலைவாணி, திமுக சார்பில் சுபலட்சுமி மற்றும் நாம் தமிழர் சார்பில் ராஜேஷ்வரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவிற்கு சில நாட்களே உள்ளதால், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.