பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு : தீயணைப்பு துறையினர் செய்முறை விளக்கம்
சென்ன சமுத்திரத்தில் பேரிடர் மேலாண்மை சார்பில் நீர்நிலைகளில் பாதுகாத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
கலவை அடுத்த சென்ன சமுத்திரத்தில் பேரிடர் மேலாண்மை சார்பில் நீர்நிலைகளில் பாதுகாத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த சென்ன சமுத்திரத்தில் எதிர்வரும் வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவமழைக் காலங்களில் பெய்யும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி காணப்படும் பட்சத்தில் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியினை வருவாய்துறையினர் ஏற்பாடு செய்தனர். பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது நிகழ்ச்சியில் தீயணைப்பு மீட்பு படையினர் கலந்து கொண்டனர். அவர்கள், நீர்நிலைகளில் விழுந்து தத்தளிப்பவர்களை காப்பாற்றும் விதம், அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகள் மற்றும் உதவிகள் ஆகியவற்றை செய்து காட்டினர்.
பின்பு, எரிவாயு சிலிண்டர் கசிவு மற்றும் எளிதில் தீபற்றக் கூடியவற்றால் ஏற்படும் தீ விபத்துகளில் பாதுகாப்பது குறித்தும் ஒத்திசைவு செய்முறைப் பயிற்சி செய்து காட்டினர். நிகழ்ச்சியில் கலவை வட்டாட்சியர் நடராஜன் தலைமை தாங்கினார். துணை வட்டாட்சியர்கள் முன்னிலையில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.