அரசு நிறுவனமாக இயங்க எல்ஐசி ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்
எல்ஐசி, அரசு நிறுவனமாக செயல்படவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இராணிப்பேட்டை எல்.ஐ.சி., அலுவலகத்தில் இன்று காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத்தலைவர் ராமன் தொடங்கி வைத்தார். கோட்டத் துணைத் தலைவர் பழனிராஜ், துணை செயலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோட்டத்தலைவர் ராமன் பேசுகையில், கொரோனா காலத்தில் கிடைத்த அற்புத சேவையை நீட்டிக்க முழுமையான அரசு நிறுவனமாக தொடர வேண்டும். ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் இன்சூரன்ஸ் பிரிமியம் பெற, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றி வரும் எல்.ஐ.சி துவங்கி 65ஆண்டுகளாகிறது. இன்று அதன் துவக்க தினமாகும். அன்றிலிருந்து இன்று வரை வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு அளித்திட ஈட்டித்தந்து வருகிறது. அரசு நிறுவனமாக உள்ளதாலேயே மக்கள் நம்பிக்கையுடன் காப்பீடு திட்டத்தில் இணைந்து வருகின்றனர். நாட்டில் மக்களின் நம்பிக்கையை நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்கக்கூடாது என்று பேசினர்
பின்னர் எல்ஐசியை தனியாருக்கு விற்காதே! என்று பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்