சாதிச் சான்றிதழ் கேட்டு இருளர் சமுதாயத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

கலவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இருளர் சமுதாயத்தினர் சாதிச் சான்று வழங்கிடக்கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-12-29 16:51 GMT

சாதி சான்றிதழ் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருளர் மக்கள்,

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள வேம்பி கிராமத்தில் ஏரிக்கரை ஓரமாக குடிசையில் வசித்து வரும் இருளர் சமுதாயத்தைச்சேர்ந்த  குடும்பத்தினருக்கு சமூக ஆர்வலர்கள். பல்வேறு  உதவிகளை  செய்து வருகின்றனர். .இந்நிலையில் அவர்களுக்கு  சாதிச்சான்று பெற்றுத்தர கலவை வட்டாட்சியர்  அலுவலகத்தில்  மனுஅளித்துள்ளனர் 

மேலும்  ,அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளனர்.  ஆயினும் சாதிச் சான்று வழங்குவதில் மெத்தனம்  காட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த இருளர் இன மூன்று குடும்பத்தினர் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

தமிழக அரசே அவர்களுக்கென்று வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் குறைதீர்வு நாளை அறிவித்து உடனடியாக தீர்வு கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது.

இந்நிலையில் கலவைவட்டத்தில் இருளர் சமுதாயத்தினரை வருவாய் அதிகாரிகள்  அலைக்கழித்தும்,  சாதிச்சான்றிதழ் கொடுக்க மறுத்து வருவது அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Tags:    

Similar News