கலவையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கலவை அரசினர் மேலநிலைப்பள்ளியில் இலவச கொரோனா தடுப்புஊசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை , அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் கலவை மணி தங்கமாளிகை சார்பில் 175 வது இலவச கண் பரிசோதனை முகாம், மற்றும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது .
முகாமை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் துவக்கிவைத்தார்.
முகாமில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத் தலைவர் சரவணன் மற்றும் ராணிப்பேட்டை கோட்டாட்சியர், உதவி ஆணையர் (கலால்), மற்றும் கலவை வட்டாட்சியர் கலந்து கொண்டனர்.
இதில், வருவாய்த்துறை அலுவலர்கள்மற்றும் பேரூராட்சி செயல்அலுவலர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்..