ரூ1 லட்சம் தந்தால் தினசரி 1கிராம் தங்கம்: பலே ஆசாமி கைது

ஆற்காட்டில் ரூ1 லட்சம் தந்தால் தினமும் 1 கிராம் தங்கக் காசு அளிப்பதாகக் கூறி தராமல் ஏமாற்றி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர் .

Update: 2021-12-05 13:42 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சடையாய்  தெருவைச்சேர்ந்தவர் சுரேஷ்பாபு (47). இவர் கடந்த 2ஆண்டுகளாக அப்பகுதியில்  ரூ,1 லட்சம் தந்தால் தினமும் 1 கிராம் அளவுக்கு தங்கக்காசு வழங்குவதாக ஆசைவார்த்தைக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில்  பணத்தைப் பெற்றுள்ளார்.

அதில், ஆற்காடு தாஜ்புராவைச் சேர்ந்த திருநாவுக்கரசு ரூ,7லட்சமும்,செல்வம் என்பவர் ரூ,20 லட்சம், ஜமீல்பாஷா ரூ,3லட்சம், ராமு ரூ2 லட்சம் என பலரும் சுரேஷ்பாபுவிடம்  லட்சக்கணக்கில் கொடுத்துள்ளனர்.

ஆனால், சுரேஷ்பாபு, சொன்னபடி யாருக்கும் தங்கக்காசை வழங்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு அவர் ,பணத்தை ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளதாகவும் பணத்தைத் திருப்பித்தர காலதாமதாகும் என்று கூறியதாக தெரிகிறது. .

இதனையடுத்து திருதாவுக்கரசு ,செல்வம், ஜமீல்பாஷாமற்றும் ராமு ஆகியோர் ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் சுரேஷ்பாபு மீது புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரித்த போலீசார் சுரேஷ்பாபுவை கைது செய்து சிறையிலடைத்தனர்..

Tags:    

Similar News