ஆற்காடு அருகே மருத்துவமனை போகும் வழியில் ஆம்புலன்ஸில் குவா..குவா..
ஆற்காடு அருகே பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு செல்லும் வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
ஆற்காடு அருகே மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் இருந்து 108 கட்டுப்பாடு அறைக்கு பிரசவ வலி தொடர்பாக அவசர அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து பாணாவரம் பகுதயில் இயங்கும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே, மருத்துவ உதவியாளர் சூரியபிரகாஷுடன் ஆம்புலன்ஸ் பாணாவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்தது. மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயசாரதி என்ற கூலித்தொழிலாளியின் மனைவி லாவண்யா , மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆற்காடு பைபாஸில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது வழியில் லாவண்யாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே, ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் சூரியபிரகாஷ் பிரசவம் பார்த்தார். அதில் லாவன்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.இதனையடுத்து ஜெயபிரகாஷ், தாயும் ,சேயும் நலமாக உள்ளதை உறுதிசெய்து ஆம்புலன்ஸை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு திருப்பினார்.
அங்கு, லாவண்யாவும் அவரது குழந்தையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.