ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.

ஆற்காடு அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி உதவிகளை வழங்கினார்.

Update: 2021-06-04 06:05 GMT

நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நோட்டுப் புத்தகங்களை தன்னார்வலர் கணேஷ் வழங்கினார்

ஆற்காடு திமிரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். தற்போதுள்ள ஊரடங்கில் வாழ்வாதாரமின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். 

ஆற்காடு வட்டாட்சியர் அவர்களுக்கு உதவும் நோக்கில் தன்னார்வலர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு நரிக்குறவர்களின் வறுமையைப் போக்க உதவி கோரினார்.    அதன்பேரில் ஆற்காடு பஜாரில் கணேஷ் நாட்டு மருந்துக்கடை உரிமையாளர கணேஷ்,  உணவுகளைத் தயாரித்து, தாசில்தார் காமாட்சியுடன் சேர்ந்து நரிக்குறவர்கள் வசித்து வரும் அனைத்துப் பகுதிகளுக்கு கொண்டுச் சென்று உணவினை வழங்கினார். மேலும் அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நோட்டுப் புத்தகங்களை தன்னார்வலர் கணேஷ் வழங்கினார்.

அதேபோல வட்டாட்சியர் கேட்டுக்கொண்டதின் பேரில் 80 குடும்பங்களுக்கு இரவு உணவை ஆற்காட்டிலுள்ள சமூக ஆர்வலர்கள்  வழங்கி வருகின்றனர் இந்நிலையில் நரிக்குறவர்கள் தங்களுக்கு உதவி செய்து வரும் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்தனர்.

#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Ranipet #Arcot #Thimiri #Narikurava #Tahsildhar #Assistance #இராணிப்பேட்டை #ஆற்காடு #திமிரி #வட்டாட்சியர் #நரிக்குறவர்கள் #உதவி #lockdown #corona #covid #covid-19 #staysafe #stayhome #quarantine #coronaspread

Tags:    

Similar News