ஆற்காட்டில் லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது

ஆற்காடு சுற்றுவட்டாரங்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்;

Update: 2021-11-24 16:28 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடுமற்றும் கத்தியவாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்  பகுதிளில் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை   கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசியத்தகவல் கிடைத்தது .

அதன்பேரில் போலீசார் கண்காணிப்பில்  ஈடுபட்டனர். இந்நிலையில் ராமு, சிவராமன், தயாளன் மற்றும் தினகரன் ஆகிய 4 பேர்  லாட்டரி விற்பனை செய்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடமிருந்து ரூ,10ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.  பின்பு ராமு, சிவராமன், தயாளன், தினகரன் ஆகிய 4பேரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News