ஆற்காடு: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பறிமுதல்..
ஆற்காடு அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பக்கம் தனியார் கல்லூரி அருகே தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆரணியில் இருந்து ஆற்காட்டை நோக்கி வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது, காரில் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக காரில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆற்காடு தாஜ்புரா பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (33) எனவும், இவர் வேலூரில் உள்ள ஹூண்டாய் கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் ஆரணியில் உள்ள வாடிக்கையாளரிடம் புது காரை ஒப்படைத்து அதற்கான நிலுவைத் தொகையான ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அந்தப் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர்,ரூபாய் ஓரு லட்சத்து 69 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சியிடம் ஒப்படைத்தனர். அந்த பணம் பின்னர் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது