நெசவாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அதிமுக எம்எல்ஏ
கலவையடுத்த வாழைப்பந்தலில் வாழ்வாதாரமிழந்த நெசவாளர் குடும்பங்களுக்கு அரிசி,மளிகைப் பொருட்களை அரக்கோணம்அதிமுக எம்எல்ஏ ரவி வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் உள்ள பச்சையம்மன் நகர், அண்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட நெசவாள குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையால் அப்பகுதி வீடுகளில் உள்ள தறிக் குழிகளில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் அவர்கள் ,நெசவுத் தொழிலைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டு வாழ்வாதரமிழந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர்.
இந்நிலையில் ,தகவலறிந்த அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவும் அதிமுக மாவட்ட செயலாளருமான சு.ரவி ,அங்குள்ள ,நெசவாள குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
பின்பு ,,அவர்கள் அனைவருக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்..
இதில் ,ஒன்றிய செயலாளர் குமார், நகர செயலாளர் சதீஷ், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.