எட்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம்

Update: 2021-02-24 06:45 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் எட்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எட்டியம்மனுக்கு பொங்கல் வைத்து எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில் எட்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிராம தேவதையான எட்டியம்மனுக்கு பொங்கல் வைத்து எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழா ஊர் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை பொங்கல் வைத்து படையல் செய்து படைப்பது வழக்கமாக உள்ளது.

இந்த எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சியில், மாம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளான சொரையூர், வாழைப்பந்தல், ஆக்கூர், குப்படிசாத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும் மாடு முட்டி மூன்று பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News