கோரிக்கைகளை நிறைவேற்றுவோருக்கு ஆதரவு: விக்கிரமராஜா

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மொத்தமுள்ள 17% வணிகர்களை திரட்டி வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோருக்கு ஆதரவு அளிக்கப்படும் - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

Update: 2021-01-17 15:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வணிகர்களின் குறைகளை கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரம ராஜா, தமிழகம் முழுவதும் உள்ள 17 சதவிகிதம் வணிகர்களை ஒன்று திரட்டும் முயற்சியில் வணிகர் சங்க பேரமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும், வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுபவருக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வணிகர்களின் வாக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டம் நீடித்துக் கொண்டே செல்வதால் பிரதமரை நேரில் சந்திக்கும் தமிழக முதல்வர் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், கொரோனா ஊரடங்கு நேரத்தில் வணிகர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News