இராணிப்பேட்டை மாவட்டத்தில்2648 பதவிகளுக்கு 7651பேர் வேட்புமனுதாக்கல்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிதேர்தலில் போட்டியிட 7651 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
இராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது்
இராணிப்பேட்டை மாவட்டத்தில்உள்ள் 7 ஊராட்சி ஒன்றியங்களில்
127ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 13மாவட்ட ஊராட்சி வார்டுகள், 288கிராம ஊராட்சிகளின் தலைவர் ,மற்றும் 2220 கிராம ஊராட்சி வார்டுகள் உறுப்பினர் , உள்ளிட்ட 2,648 பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
அதில் வாலாஜாப்பேட்டை, ஆற்காடு, திமிரி ஆகிய 3ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1179பதவிகளுக்கு முதற்கட்டமாகவும், காவேரிப்பாக்கம், சோளிங்கர்,அரக்கோணம்,நெமிலி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில்1470 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலில் போட்டியிட திமுக,அதிமுக,பாஜக, விடுதலைசிறுத்தைகள் கட்சி, ,நாம்தமிழர் உள்ளிட்ட அரசியல்கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் 13 மாவட்ட பஞ். வார்டுகளுக்கு 95 மனுக்கள், 127 ஒன்றிய வார்டுகளுக்கு 684 மனுக்கள், 288 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1247 பேரும், 2220 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு 5634 மனுக்கள் என மொத்தமுள்ள 2648 பதவிகளுக்கு 7651 பேர் மனுதாக்கல் தாக்கல் செயதுள்ளனர்.