மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 22088 பேருக்கு தடுப்பூசி
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 22088பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.;
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது..
அதில் அரசு உத்தரவின்பேரில் கடந்தமாதம் 12ம் தேதிமுதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாவட்டத்தில் உள்ள அனைத்துநகராட்சிகள், பேரூராட்சிகள்,மற்றும் ஊராட்சிகளில் 550 தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணிக்கு தொடங்கியது.
முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் மக்களுக்கு இரத்தழுத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர் ஆலோசனைக்கு பின்பு தடுப்பூசி போடப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4ஆம்கட்டமாக காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடந்த 550 கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் 22088பேர் கொரோனாதடுப்பூசி போட்டுக்கொண்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்