பொங்கல் பரிசு திட்டத்தை திமுக சத்தியமாக தடுக்கவில்லை,மு.க. ஸ்டாலின்

Update: 2020-12-29 11:15 GMT

பொங்கலுக்கு தமிழகஅரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசு திட்டத்தை திமுக சத்தியமாக தடுக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை கிராமத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதிமுக வை நிராகரிக்கவும் என்ற தலைப்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,கிராம சபை கூட்டம் என்பதை அரசு ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வேண்டும் ஆனால் கடந்த 10 வருடத்தில் அதிமுக அரசு கிராம சபை கூட்டத்தை நடத்தாதன் காரணமாகத்தான் திமுக கிராம சபை கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்து வருகிறது.இதை தடுக்கும் நோக்கத்தோடு அதிமுக அரசு கிராம சபை கூட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது.

ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க துணை முதல்வரும் பன்னீர் செல்வத்திற்கு 8 முறை சம்மன் அனுப்பியுள்ளனர் இதுவரை அவர் செல்லவில்லை. ஓபிஎஸ் நாடகமாடி துணை முதல்வர் பதவியை பெற்றார்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாவில் ஒளிந்திருக்கும் மர்மத்தை கண்டு பிடித்து வெளியே கொண்டு வருவது தான் முதல் வேலையாக இருக்கும்.

பொங்கலுக்கு அரசு ரூ. 2500 வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள் ஆனால் திமுக ரூ. 5000 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது .தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் கட்சிப் பணத்தை எடுத்து மக்களுக்கு வழங்குவதைப் போல் அரசின் பணத்தை கொடுத்து மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்று விடலாம் வாக்குகளையும் பெற்று விடலாம் என்று நினைக்கின்றனர். அரசின் இந்த திட்டத்தை திமுக சத்தியமாக தடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News