தொழிற்சாலையில் முறையான சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாததால் மின் இணைப்பு துண்டிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் இயங்கி வரும் மல்லாதி மருந்து மற்றும் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு கழிவுகள் முறையான சுத்திகரிப்பு மேற்கொள்ளாததால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவின்பேரில் மின்வாரிய துறையினர் தொழிற்சாலையில் மின் இணைப்பை துண்டித்தனர்.

Update: 2020-12-20 03:15 GMT

மருந்து மற்றும் ரசாயன தொழிற்சாலையில் வேதிப்பொருள் மற்றும் கழிவுப்பொருள்களை லாரிகள் மூலமாக ஆந்திராவுக்கு கடத்தி அங்கு மறைமுகமாக திறந்து விடுவதாக ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சிப்காட் அக்ராவரம் என்ற பகுதியில் சோதனை மேற்கொண்டனர், அவ்வழியாக வந்த அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன டேங்கர் லாரியை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டதில் லாரியில் நச்சுப் பொருள் கொண்ட ரசாயன கழிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆந்திர மாநில பதிவு செய்யப்பட்ட டேங்கர் லாரியின் ரசாயன கழிவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தொழிற்சாலையில் முறையான சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாததால் அதனால் கழிவுகளை ஆந்திர மாநிலம் புத்தூர் அடுத்த தடுகூர் என்ற வனப்பகுதியில் கொட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சார் ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு ஆலோசனை பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை வரவழைத்து நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலைக்கு அளித்துவந்த மின்சார வசதியை துண்டித்தனர்.

ரசாயன ஆலையில் இருந்து லாரிகள் மூலமாக கழிவுகளை மறைமுகமாக ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலை கழிவுகளை ஓட்டி வருவது குறித்து இரு மாநில அரசு அதிகாரிகளும் தொழிற்சாலை மீது நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலை தோல் கழிவுநீர் மற்றும் மருந்து ரசாயன கழிவுகளை உரிய சுத்திகரிக்கப்படாமல் லாரிகள் சட்டவிரோதமாக கொண்டு சென்று பொது இடங்களில் திறந்துவிடுவது மற்றும் பாலாற்றில் கழிவுகளை திறந்து விடுபவகாள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News