பரமக்குடியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

பரமக்குடியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-22 04:00 GMT

பைல் படம்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சித்திரை திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பரமக்குடி எமனேஸ்வரம் ராஷ்டிரபதி தெருவை சேர்ந்த முரளிதரன் (வயது31) என்பவர் தசாவதார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த கொட்டகையில் மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவர் கொட்டகையில் பின்புறம் உள்ள கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News