சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் எதிரொலி: டாஸ்மாக் விற்பனையாளர்கள் பணி இடைநீக்கம்

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் எதிரொலி. டாஸ்மாக் விற்பனையாளர்கள் பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை.

Update: 2021-09-29 14:55 GMT

டாஸ்மாக் விதிமுறைக்கு எதிராக பணிபுரிந்த விற்பனையாளர் சோலைராஜ், துணை விற்பனையாளர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் எதிரொலி. டாஸ்மாக் விற்பனையாளர்கள் பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை.

தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்றும் பில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் டாஸ்மாக் மதுபானக் கடையில் பீர்-க்கு அரசு நிர்ணயித்த 150 விலைதான் கொடுப்பேன் அரசாங்கம் சொல்லி இருக்கிறது என்று குடிமகன் ஒருவர் கேட்டதற்கு அந்த கடை விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் இருவரும் அடாவடியாக பேசி அரசாங்கம் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது 10 ரூபாய் கூடுதலாக வேண்டும், பில் கொடுக்க முடியாது என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்த செய்தி தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. இந்நிலையில் விற்பனையாளர் சோலைராஜ் மற்றும் துணை விற்பனையாளர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் டாஸ்மாக் விதிமுறைக்கு எதிராக பணிபுரிந்ததால் இருவரையும் பணி இடை நீக்கம் செய்து இராமநாதபுரம் டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News