தலித்துகள் படுகொலைகள்: தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் தொடரும் தலித் படுகொலைகளை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
தமிழகத்தில் தொடரும் தலித் படுகொலைகளை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜா வரவேற்றார். தமிழ் புலிகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் சிறுத்தை செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் தொடர்ந்து வரும் தலித் தலைவர்கள் மீதான படுகொலைகள், சாதியை தாக்குதல்களைக் கண்டித்தும், சிவகங்கை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் லட்சுமி என்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் துரை சிங்கத்தை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்