கபடி போட்டியில் இரண்டாமிடம்: ராமநாதபுரம் வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
மாநில அளவில் கடற்கரை கபடி போட்டியில் இரண்டாமிடம் பிடித்த ராமநாதபுரம் வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.;
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கடற்கரையில் ஏப்.2,3 ல் மாநில அளவில் கடற்கரை கபடி போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் கபடி ஆடவர் அணி பங்கேற்றது.
முதல் காலிறுதி போட்டியில் திருவாரூர் மாவட்ட அணியை 28-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியை 25-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதி போட்டியில் நாகப்பட்டினம் அணியுடன் விளையாடி 22-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது. மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற இராமநாதபுரம் மாவட்ட கபடி வீரர்களை ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.