விகிதாசார அடிப்படையில் பட்டியலில் வெளியிட கோரிக்கை: வளரும் தமிழகம் கட்சி

மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி விகிதாசார அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர்கள் சமூகத்தை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும.;

Update: 2021-08-10 08:45 GMT
விகிதாசார அடிப்படையில் பட்டியலில் வெளியிட கோரிக்கை: வளரும் தமிழகம் கட்சி

வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை.பட்டாபிராமன்

  • whatsapp icon

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை.பட்டாபிராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு செப்டம்பர் 11 தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் அமைத்து தரவேண்டும். சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை சிறை கைதிகளை அண்ணா பிறந்த தினத்தில் நல்லொழுக்க அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி விகிதாசார அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர்கள் சமூகத்தை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வளரும் தமிழகம் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறது என்று கூறினார். இந்த நிகழ்வின்போது மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன், சிவகங்கை மாவட்ட செயலாளர் சண்முகபாண்டியன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News