இராமநாதபுரம்: மீனவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் வந்த ஆட்சியர்
தங்கச்சிமடத்தில் மீனவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்.;
மீனவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த மாவட்ட ஆட்சியர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை படகுடன் விடுதலை செய்யக் கோரி இன்று தங்கச்சிமடத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் மீனவர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தப்பட்டு வருவதாக தெரிவித்துச் சென்றார்.