இராமநாதபுரம்-மானாமதுரை இடையே மின்பாதையில் ரயில் சோதனை ஓட்டம்

இராமநாதபுரம்-மானாமதுரை இடையே 60 கிமீ தொலைவுக்கு மின்பாதையில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது;

Update: 2022-01-31 13:45 GMT

இராநாதபுரம் மானாமதுரை இடையே  மின்பாதையில் நடத்தப்பட்ட ரயில் சோதனை ஓட்டம்

இராமநாதபுரம்-மானாமதுரை இடையே மின்பாதையில் இரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மின்மயமாக்கல் பணி நிறைவுபெற்றுள்ள மானாமதுரை- ராமநாதபுரம் ரயில்பாதை மற்றும் ஆண்டிபட்டி- தேனி இடையே அகல ரயில் பாதையில் ஜனவரி 30, 31 ஆம் தேதிகளில் ரயில் வேக சோதனை ஓட்டம் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மதுரை- இராமநாதபுரம் இடையே 107 கிமீ நீளமுள்ள அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக மதுரை- மானாமதுரை இடையே 47 கிமீ அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவுபெற்று, அப்பகுதியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக, மானாமதுரை- ராமநாதபுரம் இடையே 60 கிமீ தூரத்திற்கு மின்மயமாக்கல் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.அப்பகுதியை தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய் குமாா் ராய் ஜனவரி 30 ஆம் தேதி ஆய்வு செய்கிறாா். அதன் பிறகு, இராமநாதபுரத்திலிருந்து மானாமதுரை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் வேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

இதேபோல, புதிதாக அமைக்கப்பட்டு வரும் மதுரை – போடிநாயக்கனூா் அகல ரயில் பாதையில் ஆண்டிபட்டி – தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 17 கிமீ தூரத்திற்கு அகல ரயில் பாதையில் ஜனவரி 31-இல் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்கிறாா். அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் வேக சோதனை நடைபெற உள்ளது.இந்த சோதனை ஓட்டங்கள் நடைபெறும்போது, பொதுமக்கள் மற்றும் ரயில் பாதை அருகில் குடியிருப்போா் ரயில் பாதையைக் கடக்கவோ, நெருங்கவோ வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News