இராமநாதபுரம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம்: பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

இராமநாதபுரம் மாவட்டம் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Update: 2021-12-06 15:06 GMT

இராமநாதபுரம் மாவட்டம் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாட்டாளி மக்கள் கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு, மேற்கு ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம். 

இராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பெற்றபின் நடைபெற்ற முதல் பொதுக்குழு கூட்டம் இமானுவல் சேகரன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர். அதன்பின் பரமக்குடி தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் தவ அஜீத் தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் அக்கீம் மற்றும் கிழக்கு மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலையில் நடைபெற்றது.

புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட தவ அஜித்க்கு வாழ்த்துக்கள் கூறிய அதே நேரத்தில் பொறுப்பாளர்களை நியமித்த மருத்துவர் அய்யா மற்றும் சின்னையாவுக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நகர ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்பமனு பெறப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய கொள்கையான சின்னய்யா அவர்களை 2026 தமிழக முதலமைச்சராக ஆக்க பாட்டாளி மக்கள் கட்சியின் ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகளை உருவாக்குவது கட்சியினை பலப்படுத்துவதன் மூலம் நிறைவேற்றுவது. மது கடைகளை நிரந்தரமாக மூடுதல், வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது, தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது போன்ற 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News