பரமக்குடியில் பரவலாக மழை-பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
பரமக்குடியில் கனமழை. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.
பரமக்குடியில்பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேர மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. பரமக்குடி, அரியனேந்தல், பொட்டிதட்டி, வேந்தோனி, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.