மத்திய பாஜக அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களுக்கு எதிராக பாஜக அரசை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-09-20 18:15 GMT

மத்திய பாஜக அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில்  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்  திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.  இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் திமுக நகர பொறுப்பாளர் இஸ்மத் நானா தலைமையில் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, விடுதலை சிறுத்தை கட்சி மத்திய செயலாளர், ராதாகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களுக்கு எதிராக பாஜக அரசை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News