லடாக் இந்தியாவிடம் இருப்பதற்கு மோடியே காரணம்: மதுரை ஆதீனம் பேட்டி

லடாக் இந்தியாவிடம் இருப்பதற்கு பிரதமர் மோடியே காரணம் மதுரை ஆதீனம் பரமக்குடியில் பேட்டி.;

Update: 2021-09-06 12:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தியாளர்களுக்கு மதுரை ஆதீனம் பேட்டி அளித்தார்.

விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு மதுரை 293வது ஆதீனமாக ஸ்ரீ லஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார். வஉசியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு 150 பெண்கள் பொங்கல் வைத்து வைத்தனர். இந்நிகழ்வை மதுரை ஆதீனம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நவீன ராமானுஜர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு புகழாரம் சூட்டி இருப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் திருமண் போடுவாரா? என கூறினார். இந்துமதத்தில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறுகிறது. அதேபோல் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தில் தமிழில் அர்ச்சனை நடத்த அவர்களை ஒற்றுமைப்படுத்த முடியுமா. இந்து சமயத்தில் மட்டும் இது நடைபெறக்கூடாது. அனைத்து சமுதாய மக்களையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும். நித்யானந்தா கைலாசம் நாட்டிற்கு சென்று "கை லாஷ்" ஆகிவிட்டார். நித்யானந்தா மதுரை ஆதீனமாக முடியாது.

தற்போது நாட்டில் அனைவருக்கும் தேசப்பற்று குறைந்து விட்டது. தெய்வபக்தி பணத்தில் தான் உள்ளது. வஉ.சிதம்பரனாரை போல் தேசப்பற்று இன்றைய இளைஞர்களிடம் இல்லை. இளைஞர்கள் எதையோ இழந்ததைப் போல் அழைகிறார்கள். அதற்கு காரணம் அரசியலும், சினிமாவும் ஆகும். தற்போதைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது. இதனை மாற்றப்படவேண்டும். சுதந்திரமடைந்து நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. ஜவஹர்லால் நேரு காலத்தில் இந்தியாவின் லடாக் பகுதி சீன ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது பிரதமர் மோடி அதனை மாற்றி நம் வசம் வைத்துள்ளார் என பேட்டியளித்தார்.

Tags:    

Similar News