பரமக்குடியில் புதிய மின் மாற்றியை எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு

பரமக்குடி 9 மற்றும் 25வது வார்டு பகுதிகளுக்கு புதிய மின்மாற்றியை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கிவைத்தார்.

Update: 2021-11-20 05:43 GMT

பரமக்குடியில் புதிய மின் மாற்றியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ முருகேசன்.

பரமக்குடி 9 மற்றும் 25வது வார்டு பகுதிகளுக்கு புதிய மின்மாற்றியை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கிவைத்தார்.

பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 9 மற்றும் 25 வது வார்டு பகுதியில் அதிகமான மின் இணைப்புகளை உள்ளதால் குறைந்த அளவு மின் மின்சாரம் கிடைக்கப் பெற்றது. இதனால் இந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் போதிய மின்சாரம் கிடைக்காமல் குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து பரமக்குடியை எம்.எல்.ஏ.,விடம் புதிய மின் மாற்றி அமைக்க கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, நேற்று பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கிழக்க 6 நகர் செயலாளர் சேது கருணாநிதி, நகர் ஜீவரெத்தினம், எஸ்.எம்.டி.அருளாந்து, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் செல்வி சக்திவேல் உள்ளிட்ட மின்சார வாரிய. செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News