மண்டபம் மீனவர்களுக்கு வரும் 3ம் தேதி வரை காவல்: மன்னார் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்களுக்கு வரும் 3ம் தேதி வரை காவல். மன்னார் நீதிமன்றம் உத்தரவு.

Update: 2021-12-20 14:37 GMT

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் பகுதி மீனவர்களுக்கு வரும் 3ஆம் தேதி வரை காவல்-மன்னார் நீதிமன்றம் உத்தரவு

தலை மன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம்  மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (20.12.2021) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து  நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (20) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார்  உத்தரவிட்டார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மேற்படி கைது செய்யப்பட்டு மன்னார் நீரியல் வள திணைக்களத்தினரிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.

12 மீனவர்களில் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News