இராமநாதபுரம் அரண்மனை முன் ரத்த வெள்ளத் தாக்குதல்; போலீசார் கடும் திணறல்
இராமநாதபுரம் அரண்மனை முன்பு குடிபோதையில் 3 பேர் கடும் மோதலில் ஈடுபட்டனர். காவலர் முன்பே இரத்த வெள்ளத்தில் தாக்குதலும் நடத்தினர்.;
இராமநாதபுரம் அரண்மனை முன்பு குடிபோதையில் 3 பேர் கொண்ட கும்பல் தகறாறில் ஈடுபட்டது. இந்த தகறாறில் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த பஜார் காவல்நிலைய காவலர் 3 பேரையும் தடுத்தனர். ஒருவர் இரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்த போது,மற்றொருவர் காவலர் முன்பே மீண்டும் அவரை கடுமையாக தாக்கினர். ஒரு காவலரால் சண்டையை விளக்கி விட முடியாததால் உதவி காவல் ஆய்வளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர், மோதலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து ஆட்டோவில் ஏற்றி பஜார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் அரண்மனை பகுதியில் புறக்காவல் நிலையம் இருந்தும், 3 பேர் குடிபோதையில் சண்டை போட்டவர்களை கைது செய்யக்கூட போதுமான காவலர்கள் இல்லாதது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.