இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2021-09-13 04:30 GMT

இராமநாதபுரம் நேரு நகர் மற்றும் சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோவில் பகுதியில், மொத்த வியாபாரிக்கு சொந்தமான குடோனில்,  தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கேணிக்கரை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான குடோனில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15க்கும் மேற்பட்ட மூடைகளில்,  தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் புகையிலை பொருட்கள்,மற்றும் போதைப்பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார்,  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இது தொடர்பாக, குடோன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News