பரமக்குடி அருகே கண்மாய் உடைப்பு: 200 மணல் மூட்டைகளால் அடைப்பு

பரமக்குடி அருகே கண்மாய் உடைப்பு.200 மணல் மூட்டைகளால் அடைப்பு.

Update: 2021-11-25 15:34 GMT

கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதை  மணல் மூட்டைகளால் அடைக்கும் கிராமத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட சூடியூர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயில், வைகை ஆற்றில் மானாமதுரை தாலுகா அதானூர் தடுப்பு அணையில் வலதுபிதானக் கால்வாயில் திறந்து விடப்பட்ட  நீரால்  கண்மாய்க்கு நிறைந்து மூன்றாவது  மடையில்  கசிவு ஏற்பட்டுள்ளது.

கண்மாய் உடைந்தால்  அருளானந்தபுரம் குடியிருப்பு பகுதிகளும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும்  சூழ்நிலையை ஏற்பட்டது. இது குறித்து கிரமத்தினர் தாசில்தார் தமிம் ராஜாவிடம் தகவல் தொரிவித்தனர்.

உடனடியாக  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன்  200 சாக்கு மணல் மூடைகளைக் கொண்டு கசிவு பகுதியை செய்தனர். மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்  தண்ணீர் வரத்தை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பரமக்குடி சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வைகை ஆற்றில்   தண்ணீர் வரத்து அதிகரிக்கலாம். மேலும், வைகை அணையில் நீர் திறப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிகமான தண்ணீர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ஆகையால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதமடைந்துள்ள மடைகள் மற்றும் கண்மாய்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News