பரமக்குடி அரசு பள்ளியில் சமபந்தி விருந்து: எம்எல்ஏ பங்கேற்பு
பரமக்குடி எம்எல்ஏ கலந்து கொண்ட சமபந்தி விருந்து நடைபெற்றது.
பரமக்குடி எம்எல்ஏ கலந்து கொண்ட சமபந்தி விருந்து நடைபெற்றது.
பரமக்குடி வைகையாற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் ஓரம் குடிசை அமைத்து தங்கியிருந்த பழங்குடி மற்றும் நரிக்குறவர் மக்களின் பாதுகாப்பு கருதி அரசு சார்பாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 130 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மதியம் உணவு வழங்கும் வகையில் பரமக்குடி தாசில்தார் தமீம்ராஜா தலைமையில் தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை சார்பாக சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அறக்கட்டளை நிருவனர் முகமது அலி ஜின்னா, தலைவர் நைய்னா முகம்மது மற்றும் ஏனைய நிர்வாகிகள் சட்டகளம் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.