பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு தினம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.;
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பரமக்குடியில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இருந்ததால் மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
அதன்படி இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்த வருபவருக்கு சில கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இந்நிலையில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வரும் சமுதாய தலைவர்கள் வந்து செல்வதற்கான சாலைகளை சீரமைக்கும் பணிகளை வருவாய்த்துறை மூலம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இப்பணியினை இன்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்டம் முழுவதும் சுமார் 4800 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர் என்றும், நிகழ்ச்சிக்கு வருபவர்களின் வாகனங்கள் அழகப்பா உறுப்பு கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்றும் கூறினார்.
நிகழ்வின்போது பரமக்குடி வட்டாட்சியர் தமிம்ராஜா, தேவேந்திர பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா, செயலாளர் செல்வக்குமார் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் அனுமதி பெற விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்கள் முன் அனுமதி பெற்று, தங்கள் சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும். உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.