இராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய முதியவருக்கு அபராதம்
இராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய முதியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
இராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய முதியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இராமநாதபுரம் வனவர் ராஜசேகர், வனக்காப்பாளர் முத்துக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டூரணி பகுதியில் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வேட்டையாடிய முயல்களுடன் நின்ற ஒருவரை பிடித்தனர். விசாரணையில், காட்டூரணி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அசோகன் (வயது 56) என தெரிந்தது. அவர் வேட்டையாடி உறியில் உயிருடன் வைத்திருந்த 4 முயல்களை பறிமுதல் செய்து, அசோகனுக்கு அபராதம் விதித்தனர். அந்த முயல்களை சக்கரக்கோட்டை கண்மாய் பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.