மேக்கேதாட்டுவில் அணை கட்டும் நடவடிக்கையைக் கண்டித்து கர்நாடக முதல்வரின் உருவபொம்மை எரிப்பு
கர்நாடகாவில் தமிழ்பெயர்களை அழிக்க முயற்சிக்கும் வாட்டாள் நாகராஜின் தமிழர் விரோதப்போக்கைக் கண்டித்தும், தாய் தமிழர் கட்சியினர் கண்டன தெரிவித்தனர்
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் நடவடிக்கையைக் கண்டித்து கர்நாடக முதல்வரின் உருவபொம்மை எரித்து தாய் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்தும், கர்நாடகாவில் தமிழ்பெயர்களை அழிக்க முயற்சிக்கும் வாட்டாள் நாகராஜின் தமிழர் விரோதப்போக்கைக் கண்டித்தும், பரமக்குடி ஐந்து முனை பகுதியில் தாய் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் செல்வம், அமைப்புச் செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திருப்பதி அனைவரையும் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கர்நாடக அரசை கண்டித்தும், வாட்டாள் நாகராஜை கண்டித்தும் கண்டனமுழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்பு, தேசிய நெடுஞ்சாலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வாட்டாள் நாகராஜ் ஆகியோரின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உருவ பொம்மை மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.