முழு ஊரடங்கு எதிரொலி : ராமநாதசுவாமி கோயில் வாசலில் நடைபெற்ற திருமணம்

முழு ஊரடங்கு எதிரொலியாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வாசலில் திருமணம் நடைபெற்றது.;

Update: 2022-01-23 08:26 GMT
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக் கோயில் வாசலில் நடந்த திருமணம்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளமதால் அத்தியவசிய தேவைகளை தவிர்த்து வெளியில் சுற்றும் நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.இந்த முழு ஊரடங்கில் திருமண மண்டபம், கோயில் போன்ற இடங்களில் கூட்டமாக திருமணம் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எளிமையாக நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.இதனால் இன்று இராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமே பல கோயில்களில் வாசலில் எளிமையாக திருமணங்கள் நடைபெற்றது.

இந்நிலையில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஒன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் நுழைவு வாயில் உள்ள மேலவாசல் முருகன் கோவிலில் மணமகன், மணமகள் மற்றும் 40 பேர் கொண்ட திருமண வீட்டார் கோவிலுக்கு வந்து திருமணத்தை முடித்துச் சென்றனர்.

கொரோனா மூன்றாவது அலை ஊரடங்கு எதிரொலியால் திருமணத்தை விமரிசையாக நடத்த முடியாமல் மிகவும் எளிமையாக நடத்துவதாக திருமண வீட்டார் தெரிவித்தனர். இதேபோல் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில், பிரப்பன்வலசை முருகன் கோவலி;, உச்சிப்புளி நாகச்சி அம்மன் திருக்கோயில் வாசலிலும் திருமணங்கள் நடைபெற்றன.

Tags:    

Similar News