இராமநாதபுரம் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது
இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 275 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 112 நகரப் பேருந்துகள் 163 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 275 பேருந்துகள் வழக்கம்போல இன்று முதல் இயக்கப்படுகின்றன. இன்று காலை 6 மணிக்கு பேருந்துகளின் இயக்கம் துவங்கிய போதிலும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. நகரப் பேருந்துகள் மாவட்டம் முழுவதும் இயக்கப்படுகிறது.