பரமக்குடியில் இரு பிரிவினரிடையே மோதல்; அரசு அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை

பரமக்குடி அருகே இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் அரசு அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.;

Update: 2021-08-17 11:38 GMT

அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கிராமத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் உள்ள அயன் பெரியனேந்தல் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் 50-மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தினர் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த இடத்தில் பால்வாடி கட்டிடம் அமைத்து தருமாறு மாற்று சமுதாயத்தினர் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

ஆத்திரமடைந்த தேவேந்திர குல வேளாளர் மக்கள் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

தகவலறிந்த நயினார்கோவில் அரசு அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் அக்கிராமத்திற்கு விரைந்து சென்று பிரச்சனைக்குரிய இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இரு தரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News